ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக் கான வேட்பு மனு தாக்கலின் 3-வது நாளில் 930 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 34 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 2-ம் நாளில் 323 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், 3-ம் நாளான நேற்று மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 17 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 161 பேரும், கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 751 பேர் என மொத்தம் 930 பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago