திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை - 500 மையங்களில் தடுப்பூசி முகாம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 500 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 12-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இதில், 40 ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலை யில், நாளை (செப்-19) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 500 வாக்குச்சாவடி மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 4.50 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 45 சதவீதமாகும். எனவே, மீதமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டு 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை கொண்டு வர வேண்டும்.

குறிப்பாக, விவசாய பெருமக்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திரளக கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்