- திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 4 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கரோனா :

By செய்திப்பிரிவு

திருப்பூர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 ஆசிரியர்கள், வட்ட காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை, சின்னாண்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆகியோருக்கு கரோனாதொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் இரு ஆசிரியர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.

இதையடுத்து, பள்ளிகளில் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது.

அதேபோல, உடுமலை அருகே கொங்கல்நகரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ம் வகுப்புமாணவன், அதே பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, அந்த இரு வகுப்புகளிலும் பயின்ற 70 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இரு மாணவர்கள் 4 ஆசிரியர்கள் என திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 6 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி மற்றும் குன்னூரில் அரசு உதவி பெறும் பள்ளியான சாந்தி விஜய் பள்ளியில் படிக்கும் 10-ம்வகுப்பு மாணவி ஆகியோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இரு பள்ளிகளிலும் மாணவிகளுடன் தொடர்பில் இருந்த மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது, ‘‘இரு மாணவிகளையும் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற அறிவுறுத்தி உள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்