காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - ஊராட்சி தலைவர் பதவிக்கு 141 பேர் வேட்புமனு தாக்கல் :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 நாட்களில் 141 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் 2,321 பதவிக்கு நடைபெறவுள்ளது.

11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 274 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், 1,938 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் வேட்புமனு தொடங்கிய செப்டம்பர் 15-ம் தேதி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 30 பேரும் என மொத்தம் 32 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று. ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 79 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 281 பேரும் என மொத்தம் 362 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோல் செங்கல்பட்டு காட்டாங்குளத்தூர், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், புனிததோமையார் மலை, மதுராந்தகம், லத்தூர், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களில் 3,208 பதவிகள் உள்ளன.

இதில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளான செப். 15-ம் தேதி மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளுக்கும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும் என மொத்தம் 31 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நேற்று ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 58 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்