விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற 6, 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங் கள் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், விழுப்புரத்தில் நேற்று திமுக மாவட்ட செயலா ளரான எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோ சனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றிவாய்ப்புள்ள பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தொடர்ந்து வருகிற 19-ம் தேதிகூட்டணிக் கட்சிகள் போட்டியி டும் வார்டுகள், திமுக போட்டி யிடும் வார்டுகள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் திமுக சார்பில் எம்எல்ஏ லட்சுமணன், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வடக்கு மாவட்டத்தில்
இன்று நேர்காணல்
விழுப்புரம் வடக்கு மாவட்டதிமுக சார்பில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிருவோருக் கான நேர்காணல் இன்று நடை பெறுகிறது என்று மாவட்ட செயலாளரான அமைச்சர் மஸ்தான் தெரி வித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம்திமுக வடக்கு மாவட்டத்திற் குட்பட்ட செஞ்சி, மயிலம் , திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் உள்ள ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகின்ற திமுக வேட்பாளர்களுக்கு நேர்காணல் கூட்டம் என் தலைமையில் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.
பிற்பகல் 2 மணி முதல் 5 மணிவரை மயிலம், ஒலக்கூர்,மரக்காணம் ஆகிய ஒன்றியங்க ளில் போட்டியிட விருப்பமனு அளித்த நிர்வாகிக ளுடன் திண்டிவனம் ஜே.வி.எஸ் திருமண மண்டபத்தில் நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago