சேத்தியாத்தோப்பில் பாசன வாய்க்கால் திறப்பு :

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டி லிருந்து செல்லும் தண்ணீர் வெள்ளாறு ராஜன் வாய்க்கால் மூலம் 9 கிளை வாய்க்கால்கள் வழியாக பாசனத்திற்கு செல்கிறது. இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இப்பகுதி விவசாயிகள் சம்பா பருவத்துக்கு வயலில் உழவு செய்தும், நெல் விதைப்பும் மற்றும் நாற்றங்கால் அமைத்தும் வருவதால் போதுமான தண்ணீர்இல்லாததால் பாசன வாய்க்கால் களில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற பொதுப்பணித்துறை அதி காரிகள் நேற்று சேத்தியாத்தோப்பு ஏடிஎஸ் மதகு மற்றும் வானம்பார்த்த வாய்க்கால், பழைய முரட்டு வாய்க்கால், அறியகோஷ்டி வாய்க்கால் உள்ளிட்ட வாய்க் கால்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்தனர்.

முன்னதாக பொதுப் பணித்துறையினரால் பாசன வாய் க்கால் ஷட்டர்களுக்கு பூஜைகள் செய்து சூடம் ஏற்றி தீபாராதனை காட்டப்பட்டு, தண்ணீர் செல்லும் பாசன வாய்க்காலில் பூக்கள் தூவப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்