கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதுகலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு இன்று (17-ம் தேதி) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான (2021-22) முதுகலை முதலாமாண்டு மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், கலந்தாய்வுக்கு வரும் மாணவியர்கள் பட்டப்படிப்பில் பயின்ற பாடப்பிரிவின் அசல் மதிப்பெண்பட்டியல்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்கள் அசல் மற்றும் மூன்று நகல்கள், அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 கட்டாயம் எடுத்துவர வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை பாடப்பிரிவுகளான எம்ஏ தமிழ் மற்றும் ஆங்கிலம், எம்.காம் வணிகவியல், எம்.எஸ்சி வேதியியல், எம்.எஸ்சி உயிர்வேதியியல், எம்.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago