தேங்காய் எண்ணெய்க்கான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவின் உள்நாட்டு சமையல் எண்ணெய் மொத்த நுகர்வில், மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதி எண்ணையை நம்பியே உள்ளது. இறக்குமதி எண்ணெய்க்கு அரசு மானியம் கொடுத்து, அதை ரேஷன் கடைகளில் மக்களுக்கு விநியோகித்து வருகிறது. இந்தியாவில் விளையும் தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய்களுக்கு அரசு மானியம் கொடுப்பதில்லை. இவற்றை ரேஷன்கடைகள் மூலம் மக்களுக்கு வழங்குவதும்இல்லை.
இந்நிலையில், தேங்காய் எண்ணெய்க்கான ஜிஎஸ்டியை 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக, மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 80 லட்சம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரமாகத் தென்னை சாகுபடி உள்ளது. இந்த நிலையில், உள்நாட்டு உற்பத்தி உணவுப் பொருளான தேங்காய் எண்ணெய்க்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிப்பதே இயற்கை நியதி ஆகும். இதற்கு மாறாக, வரியை உயர்த்தி இருப்பது, விவசாய விரோதப் போக்காகும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago