கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட 1.54 லட்சம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த உப்பு கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இருவார தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமை வகித்து பேசியதாவது:
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டுள்ளது. இம்முகாம் வரும் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், முதல் வாரத்தில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தலா ஒரு ஓஆர்எஸ் உப்புக்கரைசல் பாக்கெட் வழங்கப்படுகிறது.
மேலும், கை கழுவும் முறை, உப்புக்கரைசல் தயாரிக்கும் முறை, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அதன் சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.அனைத்து துணை சுகாதார நிலையங்களில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை, அங்கன்வாடி மையத்தில் மற்றும் பள்ளிகளில் உப்புக்கரைசல் வைக்கப்படும். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 205 பேர் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago