திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஆட்காட்டி மகா மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் வி.திவாகரன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடி ஒன்றியக் குழுத் தலைவர் டி.மனோகரன், கிராம கமிட்டித் தலைவர் டி.கோவிந்தராஜன் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், அ.தி.க பொதுச் செயலாளர் திவாகரன் ஆகிய இருவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டு வந்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்டபோது, ஒருவரையொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago