செய்யாறு அருகே பண்ணைக் குட்டைக்கு பள்ளம் தோண்டிய போது பழங்கால 3 பானைகள் மற்றும் மண் தொட்டி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த தண்டரை கிராமத்தில் சேகர் என்பவரது விவசாய நிலத்தில் பண்ணைக் குட்டை அமைக்க இறுதி கட்ட பணி நடைபெற்றது. அப்போது, பள்ளம் தோண்டியபோது, மண்ணில் புதைந்து இருந்த பழமையான பானை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாட்சியர் திருமலை தலைமையிலான வருவாய்த் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் மீண்டும் தோண்டும் பணி நடைபெற்றது. 2 அடி ஆழத்துக்கு தோண்டியபோது, கருப்பு நிறத்தில் 2 பானைகளும், செம்மண் நிறத்தில் ஒரு பானையும் மற்றும் அகலமான மண்தொட்டி கண்டெடுக்கப்பட்டது. பானை மற்றும்தொட்டியில் மண் நிரம்பி இருந்தது. மண்ணில் இருந்து எடுக்கப்பட்டபோது சேதமடைந்த 3 பானை மற்றும் தொட்டி ஆகியவை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பொருட்களை தொல்லியல் ஆய்வுக்கு பிறகு, அவை எந்த காலத்துக்கு சொந்தமானது என்பது தெரியவரும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago