தி.மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் அரசு கூடுதல் தலைமை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைச் செயலாளர் அபூர்வ வர்மா ஆய்வு செய்தார்.
விளையாட்டு அரங்கில் உள்ள செயற்கை இழை ஓடு தளம் மற்றும் கைப்பந்து தளத்தை ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர், மாணவிகளுக்கான விளையாட்டு விடுதி, பல்நோக்கு விளையாட்டு அரங்கத்தை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர் வருவதற்கு முன்பாக மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு சென்ற ஆட்சியர் பா.முருகேஷ், விடுதியில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவிகளிடம், விடுதியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது மாணவிகள், கழிப்பறை வசதியை மேம்படுத்தி கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், விடுதியில் ஆய்வு செய்து உணவு உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் தரமாக செய்து கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago