வரைவு முதன்மை வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர்களின் கீழ் உள்ள 14 சட்டப்பேரவை தொகுதிகளின் வரைவு முதன்மை வாக்குச் சாவடி பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

இந்திய தேர்தல் ஆணையம், நகர்புறம், ஊரகப் பகுதிகளில் 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளைமறு சீரமைப்பு செய்து வாக்குச் சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரின்கீழ் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஏற்கெனவே உள்ள 3,622 முதன்மை வாக்குச் சாவடிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆல்பிஜான் வர்கீஸ் அறிவுரைப்படி மறுசீரமைக்கப்பட்டன.

அவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட 3,656 வரைவு முதன்மை வாக்குச் சாவடி பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்ததாவது:

வரைவு முதன்மை வாக்குச் சாவடி பட்டியல், பல்வேறு அரசு அலுவலகங்களில்உள்ள விளம்பர பலகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், குடியிருப்போர் நலச் சங்க உறுப்பினர்கள் எவரேனும் வரைவு முதன்மை வாக்குச் சாவடி பட்டியலில் ஆட்சேபனை அல்லது திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனில் தங்களது எழுத்துப் பூர்வமான கடிதங்களை, வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒரு வாரத்துக்குள் அளிக்கவேண்டும் என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளுக்கும் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்