விழுப்புரம் மாவட்டத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை :

By செய்திப்பிரிவு

திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடம் இடம் குறித்த அறிவிப்பு 19-ம் தேதி வெளியாகும் என்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற 6, 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்று விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏயுமான புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறியது:

திமுகவினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனினிஸ்ட் கட்சிகளிடம் அவர்களுக்கான இடம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் பின் அதாவது வருகிற 19-ம் தேதி திமுக மற்றும் கூட்டணிக்கட்சியினர் போட்டியிடும் இடம் குறித்த அறிவிப்பை திமுக தலைமை வெளியிடும். கூட்டணிக்கட்சினரிடம் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொண்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்