திமுக ஆட்சியில் நியாய, தர்மங்களை எதிர்பார்க்க முடியாது. அதிமுகவினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமாகும் என சி.வி. சண்முகம் தெரிவித்தார்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் ஓ.எஸ். மணியன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது:
உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனுவை மிகவும் கவனத்துடன் தயாரித்து தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுவில் தவறுகள் இருந்தால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சொல்ல வேண்டும். ஆனால் இந்த ஆட்சியில் நியாய, தர்மங்களை எதிர்பார்க்கமுடியாது. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்த அரசு எதையும் செய்யாது. நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமாகும்.
இந்த அரசை ஏன் கொண்டு வந்தோம் என்று அரசு ஊழியர்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம், நகைக்கடன் தள்ளுபடி போன்றவைகளுக்கு அரசு நிபந்தனை விதித்துள்ளது. மக்கள் திமுகவை நம்பி ஏமாந்தார்கள். அதிமுக மற்றவர்களை நம்பி இல்லை. நம்மை நம்பிதான் மற்றவர்கள் உள்ளார்கள். திமுகவின் ஆட்சியை பற்றி மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago