கடலூர்,விழுப்புரம் அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம் :

கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் அண்ணா பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

கடலூரில் திமுக சார்பில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏ ஐயப்பன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்எல்ஏ இளபுகழேந்தி, நகர செயலாளர் ராஜா மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

இதே போல் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சேவல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிஞ்சிப்பாடி யில் அண்ணா சிலைக்கு திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரைசந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் மாணிக்கவேல், வேலு ,கனகராஜ், கண்ணன், எழிலேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் உள்ள அண்ணாசிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட அவைத்தலைவர் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் திருமாறன், முன்னாள் எம்எல்ஏ அருள், கருப்பு ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளரான எம்எல்ஏ புகழேந்தி தலைமையில், விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன், மாவட்டத்துணை செயலாளர் புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நிர்வாகிகள் பசுபதி, ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டதிமுக சார்பில் நேற்று பேரறிஞர் அண்ணாவின் 113-வதுபிறந்தநாள் விழாவையொட்டி செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்தும், தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் பொதுமக்களுக்கு

இனிப்பு  வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், நகர செயலாளர் காஜா நஜிர், மாவட்டவிவசாய அணி துணை அமைப்பாளர் அரங்க ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்