தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் - 50% தள்ளுபடியில் புத்தக விற்பனைதுணைவேந்தர் தொடங்கி வைத்தார் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் நிறுவன நாள் மற்றும் அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி, 50 சதவீத தள்ளுபடியில் சிறப்பு புத்தக விற்பனை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

சிறப்பு புத்தக விற்பனை அரங்கை குத்துவிளக்கேற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஒருமாத காலத்துக்கு நடைபெறும் இந்த புத்தக விற்பனை கண்காட்சியில் 278 தலைப்புகளில் நூல்கள், 16 புதிய வெளியீடு நூல்களும் இடம் பெற்றுள்ளன.

பின்னர், பல்கலைக்கழக பேர வைக் கூடத்தில் நடைபெற்ற நிறுவன நாள் விழாவில் மொழிப் புலத் தலைவர் முனைவர் இரா.காமராசு வரவேற்றார். வளர் தமிழ் புலத் தலைவர் கு.சின்னப்பன், பதிவாளர் முனைவர் கோ.கோவை மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் எழுதிய 16 புதிய நூல்களை துணைவேந்தர் கோ.பாலசுப்பிர மணியன் வெளியிட, புதுச்சேரி பிரெஞ்சு ஆசியவியல் நிறுவன முதுநிலை ஆய்வாளர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து பெற்றுக்கொண்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்