தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 ஊரக உள்ளாட்சிபதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் காலியாக உள்ள ஆழ்வார்கற்குளம், மூலக்கரை, வாலசமுத்திரம், கொல்லம் பரும்பு, வேலிடுபட்டி, வெம்பூர், சின்னவநாயக்கன்பட்டி ஆகிய 7 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
மேலும், உமரிக்கோட்டை, வர்த்தகரெட்டிபட்டி, வட வல்லநாடு, சிறுத்தொண்டநல்லூர், வெங்கடேஸ்வர புரம், வெள்ளமடம், காயாமொழி, லட்சுமிபுரம், குலசேகரன்பட்டினம், எழுவரைமுக்கி, இளம்புவனம், மேலஈரால், காலங்கரைப்பட்டி, புங்கவர்நத்தம், வடக்கு வண்டானம், குதிரைகுளம், பாஞ்சாலங்குறிச்சி, சாமிநத்தம், தெற்கு வீரபாண்டியபுரம், தருவைகுளம், வாலசமுத்திரம், கலப்பைபட்டி, மருதன்வாழ்வு, ஓட்டப்பிடாரம், கொத்தாலி, பி.மீனாட்சிபுரம், வைப்பார், விருசம்பட்டி, அயன்கரிசல்குளம், கே.துரைச்சாமிபுரம், சிவலார்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலா ஒரு வார்டுக்கும், பத்மநாபமங்கலம், கருவேலம்பாடு ஆகிய ஊராட்சிகளில் தலா 2 வார்டுகளுக்கும், பிச்சுவிளை ஊராட்சியில் 6 வார்டுகளுக்கும் என மொத்தம் காலியாக உள்ள 41 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான தேர்தல் அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. 12 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் தேர்தல் நடைபெறும் ஊராட்சி அலுவலகங்களில் தேர்தல் அறிவிக்கை ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பு மனுக்கள் அந்தந்த ஊராட்சிகள் அடங்கியுள்ள கருங்குளம், வைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அலுவலரிடமும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்கள், அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் உள்ளஉதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தாக்கல் செய்யப்படுகின்றன.
வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று தூத்துக்குடி ஒன்றியம் உமரிக்காடு பஞ்சாயத்து 1-வது வார்டு, வரத்தக ரெட்டிப்பட்டி பஞ்சாயத்து 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர், உடன்குடிஒன்றியம் லட்சுமிபுரம் பஞ்சாயத்து4-வது வார்டு மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் மருதன்வாழ்வு பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் என மொத்தம் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் வரும் 22-ம்தேதி வரை நடைபெறுகிறது. மனுக்கள் பரிசீலனை 23-ம் தேதிநடைபெறுகிறது. 25-ம் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு 9.10.21 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் கடைசி ஒரு மணி நேரம் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 12.10.21 அன்று நடைபெறுகிறது.
ஆழ்வார்கற்குளம், மூலக் கரை, வாலசமுத்திரம், கொல்லம் பரும்பு, வேலிடுபட்டி, வெம்பூர், சின்னவநாயக்கன்பட்டி ஆகிய 7 ஊராட்சித் தலைவர்கள் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago