காங்கயத்தில் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. ‘ஆண்டவன் உத்தரவு’ என்ற பெட்டியில், ஒரு பொருளை வைத்து, சிறப்பு பூஜை செய்வது இக்கோயிலின் தனிச்சிறப்பு. கோயில்வளாகத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சிவன்மலை ஊராட்சி மன்றத் தலைவர் கே.கே.துரைசாமி, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: சிவன் மலை கோயிலில் சாலை சீரமைப்பு, கிரிவலப் பாதையின் மலை அடிவாரத்தில் குடிநீர், ஹாலோ பிளாக் கற்கள் பதிப்பது, பூங்காக்கள் அமைப்பது உட்படபல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சி நிர்வாகம்சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் அப்போது இருந்த கோயில் செயல் அலுவலரிடம் திட்ட வரைவு பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
கரோனா பரவல், ஆட்சியர் மாற்றம், அதிகாரிகள் இடமாற்றம்உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அந்த திட்ட வரைவினை தற்போதையதிருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் சமர்ப்பித்தோம். நடப்பு ஆண்டில் (2021) கோயில் நிர்வாகத்திடம் புதிய திட்ட வரைவு பெற்று சமர்ப்பிக்குமாறு, ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். மலைப் பாதையில்தெருவிளக்குகள் அமைக்க மின்வாரிய அதிகாரிகளும், சுற்றுலாத் துறையினரும் தயாராக உள்ளனர்.இதற்காக திட்ட வரைவு தயாரித்துஅளிக்கும்படி கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி இரண்டு வாரங்களாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு அவர்கூறினார்.
சிவன்மலை கோயில் நிர்வாக ஆணையர் முல்லை கூறும்போது,‘‘கோயில் வளாகத்தில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட மேம்பாட்டுப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். இதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago