ராயக்கோட்டையில் சாமந்திப்பூ சாகுபடி : திருவிழாக்களை எதிர்நோக்கி விவசாயிகள் ஆர்வம்

By எஸ்.கே.ரமேஷ்

திருவிழாக்களை எதிர்நோக்கி, ராயக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் சாமந்திப் பூ சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி மற்றும் பாகலூர் பகுதியில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி, மல்லிகை மற்றும் பல்வேறு வகை அலங்கார மலர்கள் ஆண்டு முழுவதும் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் சாமந்திப் பூக்கள் மட்டும் சுமார் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்படுகிறது. சாமந்திப் பூக்களை பொறுத்தவரையில் தீபாவளி, ஆயுதபூஜை, பொங்கல் உள்ளிட்ட விழாக்களை குறி வைத்து சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சாமந்திப் பூக்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே, சூரத், மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில் நிகழாண்டில் ஆயுதபூஜை, சரஸ்வதிபூஜை மற்றும் தீபாவளி உள்ளிட்ட விழாக்களுக்காக ராயக்கோட்டை பகுதியில் வழக்கத்தை விட சாமந்திப்பூ சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக ராயக்கோட்டை அருகே மேல்நூக்கி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ஆண்டு முழுவதும் சாமந்திப் பூக்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், விழாக் காலங்களில் லாபம் கிடைப்பதால், வழக்கத்தைவிட நிகழாண்டில் பலர் சாமந்திப்பூ பயிரிட்டுள்ளனர்.

தற்போது பூக்கள் கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது. விழா நாட்களில்கிலோ ரூ.200-க்கு மேல் விற்பனையாகும்.

தற்போது நல்ல மழை பொழிவு உள்ளதால், விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை யும் குறைந்து விலை வீழ்ச்சி யடைந்தது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பூக்கள் விற்பனை அதிகரித்து கைகொடுக் கும் என்ற நம்பிக்கை உள்ளது, என்றனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்