இதனை ஆய்வு செய்த எஸ்.பி. செந்தில்குமார், புகார்தாரர் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க முதன்முறையாக சிவகங்கை மாவட்டத்தில் “பொதுமக்கள் மனுக்கள் குறைதீர்ப்பு திட்டம்” என்ற புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தினார். இதில் எஸ்பியிடம் அளிக்கப்படும் அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலமே அனுப்பப்படும். இதன்மூலம் மனுக்கள் வரவில்லை என கூறி புகார்தாரரை அலைக்கழிக்க முடியாது.
இதுகுறித்து எஸ்பி செந்தில்குமார் கூறுகையில், ‘முதற்கட்டமாக எஸ்பி அலுவலகத்தில் அளிக்கும் மனுக்களுக்கு மட்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து டிஎஸ்பி அலுவலகங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago