பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கேட்டு செப்.30-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில குழுக் கூட்டம் மாநில அமைப்பு செயலாளர் நாகை எஸ். தர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு பின்னர், அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக அரசு கொண்டு வந்துள்ள அறநிலையத் துறை சொத்து அபகரிப்புக்கு எதிரான, தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதா விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தும். இதனால், 100 ஆண்டுகளுக்கும் மேல் சாகுபடி உரிமை பெற்று சாகுபடி செய்துவரும் கோயில் குத்தகை விவசாய நிலங்கள், விவசாயிகளிடமிருந்து அபகரிக் கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், ஆக்கிரமிப்பாளர்களிட மிருந்து நிலத்தை பாதுகாக்கும் பொருட்டு கொண்டு வரப்படு கின்ற சட்டம், விவசாயிகளை தன் நிலத்தை விட்டு வெளி யேற்றுவதற்கும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கும் வழிவகுக்கும். எனவே, இந்த சட்டத்தில் விவசாயிகளின் நிலை குறித்து முதல்வர் தெளிவுபடுத்த முன்வர வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டும் 4.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாராகி வருகிறது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்வதற் கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் தொடங்க வேண்டும்.
2020-21-ல் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் மத்திய, மாநில அரசுகள் காலம் கடத்துவதை ஏற்கமாட்டோம். பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி செப்.30-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல்லாயிரக்கணக்கான விவசா யிகள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபடுவார்கள் என கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago