பள்ளியில் ஆசிட் தெறித்து 4 மாணவிகள் படுகாயம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே கண்டமங் கலத்தில் சாலைவிரிவாக்கம் பணி நடைபெற்றுவருகிறது. இந்த விரிவாக்கத்தில் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் வேதியியல் ஆய்வகமும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் பள்ளியில் ப்ளஸ் 2 படிக்கும் மாணவிகள் வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆசிட் பாட்டில் ஒன்று கைதவறி கீழே விழுந்தது. ஆசிட் தெறித்ததில் அருகில் இருந்த 17 வயது உடைய 4 மாணவிகள் படுகாயமடைந்தனர். இத்தகவல் அறிந்த பள்ளித்தலைமை ஆசிரியர் ராஜாராம் மற்றும் ஆசிரியர்கள் மாணவிகளை அரியூரிலிருக்கும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இத்தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணன் தலைமையிலான கல்வித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே மாணவி ஒருவர்ஆசிட் தெறித்தவுடன் தன் கண்ணை துடைத்துள்ளார். அம்மாணவிக்கு தவளக்குப்பம் அரவிந்தர் கண் மருத்துவமனையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரதுகண்ணில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்ததாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்