வெள்ளப்பாக்கம் ஊராட்சியில் நகராட்சி குப்பைக் கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு :

கடலூர் நகராட்சி நிர்வாகம் விவசாய நிலத்தில் குப்பைக்கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் வட்டத்திற்குட்பட்ட வெள்ளப்பாக்கம் ஊராட்சி தற்போது, கடலூர் நகராட்சியுடன் இணைவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடலூர் நகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளுக்கு சில இடங்களில் மறுசுழற்சி மேலாண்மை செயல்படுத்தப்படுகிறது. இதற்காக வெள்ளப்பாக்கத்தில் சுமார் 90 ஏக்கரில் ஏற்கெனவே செயல்பட்டு தற்போது கைவிடப்பட்ட விதைப் பண்ணை நிலத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த இடத்தை நகராட்சி அலுவலர்கள் கடந்த 9-ம் தேதி பார்வையிடச் சென்ற போது கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று கிராம மக்கள் நகராட்சி குப்பை கொட்ட உத்தேசிக்கப்பட்ட இடத்தில் டெண்ட் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, வட்டாட்சியர் பலராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றப்படாது என்று உறுதியளித்ததால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்