திண்டுக்கல் மாவட்டத்தில் - ஒரே நாளில் கரோனா தடுப்பூசி செலுத்திய 72,456 பேர் : தங்க நாணயம் பரிசு வழங்கிய கிராம ஊராட்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் மொத் தம் 72,456 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த அமைக் கப்பட்ட 1,225 மையங்களில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டத்தில் 72,456 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முன்னதாக, சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் நகர் பகுதியில் 99 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அடுத்து அதிகபட்சமாக பழநி நகர் பகுதியில் அதிகம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலையில் ஏற்கெனவே ஒரு லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் 7,334 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாநகர் பகுதியில் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தை கடந்துள்ளது. சில ஊராட்சிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி யில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டன. குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது. முதல் பரிசாக சத்யாவுக்கு தங்க நாணயம், 2-ம் பரிசாக யுவராஜ் என்பவருக்கு செல்போன் வழங்கப்பட்டன. ஊராட்சித் தலைவர் லதா இப்பரிசுகளை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்