நாகை, அரியலூர் மாவட்டங்களில் - தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

நாகை மாவட்டத்தில் குழந்தை களுக்கு தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நேற்று தொடங்கியது.

நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூர் அரசு துணை சுகாதார நிலையத்தில், மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர் அருண் தம்புராஜ், பின்னர் கூறியது:

1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கும் முதல்கட்டமாக செப்.18 வரையிலும், 2-வது கட்டமாக செப்.20 முதல் செப்.25 வரையிலும், விடுபட்ட குழந்தை களுக்கு செப்.27 அன்றும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது. இதன்படி, நாகை மாவட்டத்தில் 2,41,850 பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் திருமுருகன், ஊராட்சித் தலைவர் மு.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, அரியலூர் மாவட் டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்களில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.

அரியலூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கிவைத்து, மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி கூறியது:

அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 2,70,034 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதன் மூலம் குழந்தை களுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கப்படுகிறது என்றார்.

முகாமில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்