திருவாரூரில் நேற்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திருவாரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் திருவாரூர் பழைய மார்க்கெட் சாலையில் உள்ள ஊமைக் காளியம்மன் கோயிலில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, போலீஸாரின் அனுமதியுடன் 32-ம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
திருவாரூர் பழைய மார்க்கெட் சாலையிலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று, ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராஜசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ்ஜி, நகரத் தலைவர் செந்தில்குமார், பாஜக மாவட்டத் தலைவர் கோட்டூர் ராகவன், நகரத் தலைவர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago