கந்தனேரி நெடுஞ்சாலையில் - விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலுடன் மறியல் : மேம்பாலம் கட்டும் திட்டத்தை விரைவுபடுத்த கோரிக்கை

கந்தனேரி பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகேயுள்ள கந்த னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (45). கூலி தொழிலாளி. இவர், கந்தனேரி கூட்டுச் சாலை பகுதியில் உள்ள உணவகத்தில் நேற்று காலை சாப்பிட்டுள்ளார். பின்னர், அவர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடந்து வீட்டுக்கு செல்ல முயன் றுள்ளார்.

அப்போது, சென்னை நோக்கி வேகமாகச் சென்ற கார் சாலையை கடக்க முயன்ற துரைமுருகன் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் ஒன்று திரண்டு காரை சிறைபிடித்ததுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரி துரைமுருகனின் உடலுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இருந்து பெங் களூரு-சென்னை சாலையில் போக்குவரத்து முடங்கியது. இந்த தகவலறிந்த பள்ளி கொண்டா காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் காவலர்கள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், விபத்துக்கு காரணமான சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கோபிநாத் (28) என்பவரை கைது செய்ததுடன் கந்தனேரி பகுதியில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை யேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், போக்குவரத்து நெரிசலை காவல் துறையினர் சரி செய்தனர்.

கிடப்பில் மேம்பால திட்டம்

வேலூர் மாவட்டத்தின் வழியாகச் செல்லும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில் பெருமுகை, சத்துவாச்சாரி, கந்தனேரி, வெட்டுவானம் ஆகிய பகுதிகளில் அதிக விபத்துகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற மாவட்டநிர்வாகத்தின் கோரிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதில், பெருமுகையில் ரூ.16.10 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுமதி அளித்தும் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. வேலூர் சத்துவாச் சாரியில் சுமார் ரூ.1.65 கோடியில் தொடங்கிய சுரங்க நடைபாதை பணி மிகவும் தாமதமாகவே நடை பெற்று வருகிறது.

அதேநேரம், கந்தனேரி மற்றும் வெட்டுவானம் பகுதியில் மேம்பாலம் அமைப்ப தற்கான கருத்துரு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறைஅமைச்சகத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

கந்தனேரி பகுதியில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் கட்டும் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்