கிருஷ்ணகிரி அணையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி அணையில் நேற்று 75 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.

கரோனா பரவலை தடுக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து வழிபட்டு தனி நபர்களாக சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது நாளான நேற்று கிருஷ்ணகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கிருஷ்ணகிரி அணையின் பின்பகுதியில் சிலைகளை கரைத்தனர்.இதையொட்டி, அப்பகுதியில் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெரும்பாலும் ஒரு நபர் அல்லது இரு நபராக மட்டுமே சென்று சிலைகளை கரைத்தனர்.

இந்து முன்னணி சார்பில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் காரில் எடுத்து வரப்பட்டு அணை நீரில் விசர்ஜனம் செய்யப்பட்டது. நேற்று மாலை வரை கிருஷ்ணகிரி அணையில் 75 சிலைகள் கரைக்கப்பட்டதாக போலீ ஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE