செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,374 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.23.66 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடித் தீர்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, செங்கை, காஞ்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தலைமை தாங்கி, மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.மீனாட்சி முன்னிலை வகித்தார்.
காஞ்சி, செங்கை மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, ஜீவனாம்ச வழக்குகள் உள்ளிட்ட 4,395 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. முடிவில் 1,374 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.23,66,05,489 இழப்பீடு வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago