திருவள்ளூர் மாவட்டத்தில் 4,000 தடுப்பூசி முகாம்கள் : அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கிவைத்தார்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், சோழம்பேடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் முகாமை தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து மாவட்டங்களையும் விட திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி செலுத்தும் வயது உடையவர்கள் சுமார் 19 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 47.08 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (நேற்று) நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை முன்னிட்டு, 4 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டு, 4 ஆயிரம் மருத்துவம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மூலம், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு நாசர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நகராட்சி நிர்வாக இயக்குநரும், கண்காணிப்பு அலுவலருமான பா.பொன்னையா, பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ், பூந்தமல்லி, திருவள்ளூர் சுகாதார மாவட்ட இணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) டாக்டர் செந்தில் குமார், டாக்டர் ஜவஹர்லால் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்