முஷ்ணத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் : வேளாண் அமைச்சர் தொடக்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

முஷ்ணத்தில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் தொடக்கி வைத் தார்.

முஷ்ணம்  பூவராகசுவாமி கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணி யம் தலைமையில் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைசெல்வன் முன்னிலையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமினை நேற்று தொடக்கி வைத்தார்.

இதில் அமைச்சர் தெரிவித்தது: கரோனா தொற்று பரவலை கட்டுப் படுத்த தமிழ்நாடு முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டதன் விதமாக தற்போது தொற்று குறைந்துள்ளது.

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் நலன் கருதி பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றினை முற்றிலும் கட்டுப்படுத்தும் வித மாக தமிழ்நாடு முதல்வரின் உத்தரவிற்கிணங்க நேற்று மாநிலம் முழு வதும் ஒரே நாளில் 20 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப் பூசி வழங்குவதற்கு மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 70 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஊராட்சிநகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் பள்ளி, கல்லூரி வளாகங் கள், அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகா தார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றார்.

இதனை தொடர்ந்து பரங்கிப் பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை திறந்து வைத்து படகு சவாரி செய்வதை பார்வையிட்டார்.எஸ்பி சக்திகணேசன், சிதம்பரம் சார்- ஆட்சியர் மதுபாலன், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மருத்துவர் மீரா, அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஞானதேவன், பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரியல் உயராய்வு மைய இயக்குநர் சீனிவாசன், சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்