அய்யம்பாளையம் அருகே - மருதாநதி அணையில் தண்ணீர் திறப்பு : 6,583 ஏக்கர் பாசன வசதி பெறும்

திண்டுக்கல் மாவட்டம், அய்யம் பாளையம் அருகே உள்ள மருதாநதி அணையின் மொத்த உயரம் 74 அடி. தற்போது நீர்மட்டம் 72 அடியாக உள்ளது. இதையடுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமி, அணையிலிருந்து தண்ணீரை நேற்று திறந்துவிட்டார். ப.வேலுச்சாமி எம்.பி., ஆட்சியர் ச.விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மொத்தம் 120 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டுக்கு நாள் ஒன்றுக்கு 70 கனஅடி நீர், பழைய ஆயக்கட்டுக்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடி நீர் என மொத்தம் 90 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. மீத முள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படும். இந்த அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரால் ஆத்தூர் வட்டத்தில் 6,583 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்