பட்டாசுத் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய அமைச்சர் களை பட்டாசு உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அருப்புக்கோட்டையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, மருத்துவம் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக எடை குறைவாகக் குழந்தைகள் பிறப்பதும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.
வேளாண் சந்தைப்படுத்துதல் திட்டத்திலும் அதிக முன்னேற்றம் பெற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மின்னணு முறையில் சந்தை விலை நிலவரங்களை விவசாயிகள் அறிந்துகொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கால்நடைகள் உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் மற்றும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரை பணியமர்த்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. எந்தத் திட்டத்திலும் மத்திய அரசு யாருக்கும் பாரபட்சம் காட்டுவது இல்லை.
மாணவர்களின் கற்றல்நிலை, பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்து ஆய்வு மேற்கொள் ளப்படும்.
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர ஏற்கெனவே சட்டம் வகுக்கப் பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் தான் அதற்கான விலையை முடிவு செய்து ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டாசுத் தொழிலில் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய அமைச்சர்களை பட்டாசு உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். அரசியல் கட்சிகளில் பாஜகவில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளனர், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago