விருதுநகரில் போதிய விலை கிடைக்காமல் தக்காளி குப்பையில் கொட்டப்படுகிறது.
தற்போதைய பருவ நிலையில் நாட்டுத் தக்காளியை விட சந்தையில் பெங்களூரு தக்காளி, ஹைபிரிட் தக்காளி அதிகம் விற்பனைக்கு வந்துள்ளது. விளைச்சல் மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.10-க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. போதிய விலை கிடைக்காததால், தக்காளியை சாலை ஓரத்திலும், குப்பைகளிலும் வியாபாரிகள் கொட்டிச் செல்கின்றனர்.
இதுகுறித்து விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த வியாபாரி கந்தசாமி கூறியதாவது:
தமிழகத்தில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. மேலும், பெங்களூரு தக்காளி வரத்தும் அதிகரித்துள்ளதாலும் ஹைபிரிட் தக்காளிக்கான விலை குறைந்துள்ளது. உற்பத்தி அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்துள்ளது. ஹைபிரிட் வகை தக்காளிகளை 25 நாள்கள் வரை கெட்டுப் போகாமல் வைத்திருக்க முடியும். ஆனாலும், போதிய விலை இல்லாததால் வியாபாரிகள் மனமுடைந்து தக்காளிகளை குப்பையில் கொட்டி அழித்து வருகின்றனர் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago