தமிழக அரசுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர் நியமனம் : இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கருத்து

By செய்திப்பிரிவு

தமிழக அரசுக்கு இடையூறு செய்யவே புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார், என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

ஈரோட்டில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

மகாகவி பாரதியாரைப் போற்றும் வகையில் 14 அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். அதேபோல், வாரணாசி பல்கலைக்கழகத்தில், பாரதி பெயரில் இருக்கை அமைப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். குஜராத் உட்பட பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். அக்கட்சி படிப்படியாக சரிவைச் சந்தித்து வருகிறது.

வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. இவை உட்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்படும்.

தமிழகத்தில் 20-ம் தேதி திமுக கூட்டணிக் கட்சியினர் வீடுகளின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். 27-ம் தேதி நடக்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கிறது.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், அந்த அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பதற்காக, புதிதாக ஆளுநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்திற்கும் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்கள், அவர்கள் சொல்வதைத்தான் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்