தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை குண்டாறு அணையில் 7 மி.மீ., அடவிநயினார் அணை, செங்கோட்டையில் தலா 3 மி.மீ. மழை பதிவானது. நேற்று பகலிலும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.
குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 67.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 58.40 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 123 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 669 கனஅடி நீர் வந்தது. 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 83.60 அடியாக இருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago