திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 1,004 சிறப்பு முகாம்கள் மூலமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 1.51 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று 1,004 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தும் பணியில், மாவட்ட முழுவதும் சுமார் 2,500 சுகாதார பணியாளர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் மூலமாக, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் கண்டறி யப்பட்டு, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும், நகர பகுதி மற்றும் சில கிராமங்களில் தாமாகவே முன் வந்து தடுப்பூசியை ஆர்வத்துடன் பொதுமக்கள் செலுத்திக் கொண் டனர்.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஆரம்ப சுகாதார நிலையம், திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் நல்லவன்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் டி.ஜி.வினைய் மற்றும் ஆட்சியர் பா.முருகேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago