திருப்பத்தூர் எஸ்.பி.,யாக பாலகிருஷ்ணன் நியமனம் :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் பாலகிருஷ்ணன் நிய மிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சிபி சக்கரவர்த்தி சென்னை சைபர் க்ரைம் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, சென்னை கிழக்கு மாவட்டம் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி வந்த டாக்டர் பால கிருஷ்ணன் திருப்பத்தூர் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்து, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தர விட்டுள்ளார்.

திருப்பத்தூர் எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் பாலகிருஷ்ணன் கால்நடை மருத்துவம் படித்துள்ளார். குரூப்-1 தேர்வு எழுதி கடந்த 2007-ம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்தார். திரு வாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். அதன் பிறகு, நாகர்கோயில், வள்ளியூர், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த டாக்டர் பாலகிருஷ்ணன், கடந்த 2013-ம் ஆண்டு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, திருச்சி மாவட்ட கூடுதல் எஸ்பியாகவும், அங்கிருந்து வேலூர் மாவட்ட மதுவிலக்கு தடுப்புப்பிரிவு கூடுதல் எஸ்பியாகவும், அதன் பிறகு திண்டுக்கல் மாவட்ட எஸ்பியாகவும் பணியாற்றி வந்தார்.

இதைதொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப் பாளராக பதவி உயர்வு பெற்று, சென்னை டிஜிபி அலுவலகத்தில் எஸ்பி யாகவும், அதனை தொடர்ந்து மாதவரம் துணை ஆணையராகவும், அதன் பிறகு, சென்னை கிழக்கு மாவட்ட போக்குவரத்து பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வந்தார். இந் நிலையில், தற்போது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்