கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - மக்கள் நீதிமன்றங்களில் 3,882 வழக்குகளுக்கு தீர்வு :

கடலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த தேசிய மக்கள் நீதிமன் றங்களில் 2 ஆயிரத்து 700 வழக் குகளுக்கு தீர்வு காணப்பட்டது

கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ். ஜவஹர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், குடும்ப நல நீதிமன்ற நீதிபதி புவனேஸ்வரி, தொழிலாளர் நீதிமன்றம் மற்றும் தலைவர் நீதிபதி சுபா அன்புமணி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், எஸ்சி,எஸ்டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், சிறப்பு சார்பு நீதிபதி இருதயராணி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பாக்கியம் வரவேற்று பேசினார்.கடலூர் மாவட்ட பார் அசோசி யேஷன் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சம்பத்குமார் மற்றும் லாயர்ஸ் அசோசியேஷன் சங்க தலைவர் சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவி்ல் நீதி மன்றங்களிலும் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சுமார் 4,688 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 2,704 வழக்கு களுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.14,69,94,580 தொகைக்கு உத்தர விடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில்

விழுப்புரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,182வழக்குகளுக்கு தீர்வு காணப் பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஒருங் கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. வழக் காடிகள் சமாதான முறையில் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டால் நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை. சமாதான தீர்ப்பில் இரு தரப்பும் வெற்றி பெறுவதால் மேல்முறையீடு இல்லை என மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பு குறித்து நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எடுத்துரைத்தனர்.

சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள் , காசோலை மோசடி வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என பல தரப்பட்ட வழக்குகள் சமரச முறையில் தீர்வு காணப்பட்டன.

நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத்தக்க காசோலை பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம்கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 4,452 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 1,182 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. ரூ. 7 கோடியே 12 லட்சத்து 53 ஆயிரத்து 457- க்கு தீர்வு காணப்பட்டது.

புதுவையில் 1,515 வழக்குகளுக்கு தீர்வு

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர்வு, சட்டப் பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமர்வு, காரைக்காலில் 3 அமர்வு, ஏனாமில் 1 அமர்வு என மொத்தம் 15 அமர்வுகளில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த தொடக்க விழாவில் சட்டப் பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான சோபனா தேவி வரவேற்றார். புதுச்சேரி தலைமை நீதிபதி செல்வநாதன் தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துவேல் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதிபதி, குற்றவியல் நடுவர்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் பங்கேற்றனர்.

இதில் சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள் என மொத்தம் 3,368 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 1,515 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.4 கோடியே 83 லட்சத்து 64 ஆயிரத்து 407-க்கு தீர்வு காணப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்