சிவகங்கை மாவட்டத்தில் சருகணியாறு, மணிமுத்தாற்றை 42 கி.மீ.க்கு சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 69 கண்மாய்கள் பாசன வசதி பெறும்.
சிவகங்கை மாவட்டத்தில் பல சிற்றாறுகளில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து காணப்படுகின்றன. மேலும் மணல் கடத்தல், ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் ஆறுகளின் தடமே ஆங்காங்கே மறைந்துவிட்டன.
இந்நிலையில் தற்போது சருகணியாறு, மணிமுத்தாற்றை முழுமையாக சீரமைக்க மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி முயற்சி எடுத்துள்ளார். சருகணியாறு அலவாக்கோட்டை கண்மாயில் இருந்து தொடங்கி, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. அதேபோல் மணிமுத்தாறு ஏரியூர் கண்மாயில் இருந்து தொடங்கி பாம்பாற்றில் கலந்து, பிறகு மீண்டும் மணிமுத்தாறாக மாறி வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த ஆறுகள் மூலம் 69 கண்மாய்கள் பாசன வசதி பெறும். தற்போது இந்த 2 ஆறு களும் 42 கி.மீ. தூரத்துக்கு சீரமைக்கப்படுகின்றன. இதையடுத்து நேற்று மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆறுகளை பார்வையிட்டார். செயற்பொறியாளர்கள் வெங்கட கிருஷ்ணன் (சருகணியாறு), சுப்பிரமணியன் (மணிமுத்தாறு) ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago