சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், 1,172 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரி தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் சொக்குவள்ளியப்பா, தியாகுவள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்று 16 பட்டதாரிகளுக்கு முனைவர் பட்டங்களையும், சிறந்ததரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த 39 மாணவ, மாணவிகளுக்குபட்டங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து பேசியதாவது:
சர்வதேச தரத்தில் செயல்பட்டுவரும் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் எங்கு சென்றாலும் தனிச்சிறப்போடு விளங்கி கல்லூரிக்கு நற்பெயரை பெற்றுத்தந்து வருகிறார்கள், இத்தகைய கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், பெங்களூரு டெசால்வ் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவன இணை நிறுவனர் மற்றும் தலைவர் வீர்ப்பன், தருமபுரி செக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் உதயகுமார் ராஜேந்திரன், பெங்களூரு ஆதித்யா பிர்லா பேஷன் நிறுவன துணை பொது மேலாளர் மரியா கோரெட்டி, டால்மியா பாரத் சிமென்ட் உதவி இயக்குநர் கார்த்திகுமார், ராம் பிராப்பர்டிஸ் நிறுவன தொழில்நுட்பத் தலைவர் கணேஷ் உள்ளிட்டோர் 1,172 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago