மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை தூத்துக்குடி வருகிறார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து, எட்டயபுரம் செல்லும் அவர் பாரதியார் நூற்றாண்டு நினைவு விழாவில் கலந்து கொள்கிறார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் இருந்து கார் மூலம் இன்று (12-ம் தேதி) காலை 10 மணியளவில் தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடி வஉசி கல்லூரியில் காலை 10.15 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர், தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் செல்லும் அவர் மதியம் 12.30 மணியளவில் மகாகவி பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, பாரதியாரின் நூற்றாண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பின்னர் பாரதியார் வாழ்ந்த இல்லத்துக்குச் செல்லும் அவர் அங்குள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு எட்டயபுரத்தில் இருந்து புறப்பட்டு கார் மூலம் அருப்புக்கோட்டை செல் கிறார். இத்தகவலை மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகையையொட்டி, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்.பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago