அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் மோசடி : கிருஷ்ணகிரியில் இளம்பெண் கைது

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 2 பேரிடம் ரூ.5.65 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கிய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையைச் சேர்ந்தவர் சத்யா (24). இவரது கணவர் சங்கர் (30). கிருஷ்ணகிரி கோஆபரேட்டிவ் காலனியைச் சேர்ந்தவர் சுபலட்சுமி (24). இவர் தற்போது ஓசூர் பொம்மாண்டப்பள்ளியில் வசித்து வருகிறார். சத்யாவும், சுபலட்சுமியும் பள்ளித் தோழிகள்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரியில் சத்யாவை சந்தித்த, சுபலட்சுமி தனக்கு அரசு உயர் அலுவலர்கள் நன்கு பழக்கம் உள்ளதால் அரசு வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதையடுத்து சத்யா, பட்டதாரியான தனது கணவர் சங்கருக்கு வேலை வாங்கித் தருமாறு கூறினார்.

இதற்கு சுபலட்சுமி, ஓசூர் வருமான வரி அலுவலகத்தில் வரி மேலாளர் பணி உள்ளது. இதற்கு ரூ.1.62 லட்சம் சம்பளமும், இதர படிகள் கிடைக்கும் என தெரிவித்தார்.

இதனை நம்பிய சத்யா, ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். இதேபோல் சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள கோனேரிப்பட்டியைச் சேர்ந்த மாதையன் என்பவரும் அரசு வேலை கேட்டு சுபலட்சுமியிடம் ரூ.1 லட்சம் கொடுத்தார்.

இந்நிலையில் சத்யாவையும், மாதையனையும் கடந்த ஜூன் 21-ம் தேதி கிருஷ்ணகிரிக்கு வரவழைத்த சுபலட்சுமி பணி நியமன ஆணைகளை கொடுத்து ஜூன் 23-ம் தேதி பணியில் சேர்ந்து கொள்ளும்படி தெரிவித்தார்.

இதையடுத்து பணி நியமன ஆணையுடன் 23-ம் தேதி கிருஷ் ணகிரி ஆட்சியர் அலுவலகத் திற்கு மாதையன், சங்கர் ஆகி யோர் சென்றனர்.

அப்போது போலி பணி நியமன ஆணை என தெரியவந்ததும், 2 பேரும் கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித் தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சுபலட்சுமியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்