கோவையில் வரும் 17-ம் தேதி அஞ்சல் துறை வாடிக்கையாளர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது, என நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கோவை ரத்தினசபாபதி புரத்தில் உள்ள போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் அலுவலக வளாகத்தில் அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. அஞ்சல்துறை வாடிக்கை யாளர்கள், தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதேனும் இருந்தால் தங்கள் புகார்களை உதவி இயக்குநருக்கு சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது அஞ்சல்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் மனு சம்பந்தமாக என்று எழுத வேண்டும். குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரடியாகவும் கலந்து கொள்ளலாம் புகார் கடிதத்தில் முழு தகவல்களும் குறிப்பிட வேண்டும்.
அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரிஜிஸ்டர் தபால் அல்லது ஸ்பீடு போஸ்ட் அல்லது மணியார்டர் எண் எந்த அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டது, அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும். புகார்கள் சேமிப்பு கணக்கு அல்லது அஞ்சல் ஆயுள் இன்சூரன்ஸில் இருந்தால் அதன் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago