கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
இதையொட்டி ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கையெழுத்து இயக்கத்தினை நேற்று தொடக்கி வைத்தார். தொடர்ந்து ஆரோக்கிய வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம் என்பது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி, பேரணியை தொடக்கிவைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது:
கடலூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 49 வரை உள்ள பெண்களில் 58 சதவீதம் பேருக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. அதனால் எடை குறைவான, ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கும் அபாய சூழல் உள்ளது. இதனை தவிர்க்க தனிக் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து குறைபாடில்லா கடலூர் மாவட்டத்தை உருவாக்க முனைப்புடன் பிற துறையினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வரும் தங்கள் வீடுகளில் ஆரோக்கிய ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க முன் வர வேண்டும். நோயற்ற பெருவாழ்விற்கு யோகா கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்தி கணேசன், கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்ஜித்சிங், பவன்குமார் ஜி. கிரியப்பனவர், மாவட்ட ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சிதிட்ட அலுவலர் பழனி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago