செப்.12-ல் மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் : நூறு சதவீத இலக்கை எட்டும் அதிகாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது: மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக செப்.12-ம் தேதி 700 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இதில் குறைந்தது 75 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதத்தை எட்டும் அலுவலர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணி வண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) சிவராணி, மருத்துவ இணை இயக்குநர் இளங்கோ மகேஸ் வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா விடுத்துள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப் பூசி முகாம் செப்.12 காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை என நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகளிலும், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும், அரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையம், சமுதாயக் கூடங்கள் என 650-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்டத்தில் சுமார் 350 இடங்ளில் வரும் 12-ம்தேதி தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி தலைவர் களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடந்தது. இதில் ஆட்சியர் க.வீ.முரளிதரன் தலைமை வகித்து பேசும்போது, தடுப்பூசி முகாமுக்கு மாற்றுத் திறனாளிகள், முதியோர்களை அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்