கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 12-ம் தேதி 800-க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது, என ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வர் உத்தரவின்படி வரும் 12-ம் தேதி மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி போடாதவர்கள், 2-வது தவணை போட வேண்டியவர்கள் பயனடையும் வகையில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும். கரோனா தடுப்பூசி முகாம் காலை ஒரு இடத்திலும், மாலை வேறு இடத்திலும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டு பகுதிகள், ஊராட்சி மற்றும் கிராம பகுதிகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்படவுள்ளது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago