கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நீதிபதி வேண்டுகோள் :

திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, ரோட்டரி அரவிந்த் கண் வங்கி ஆகியவை இணைந்து 36-வது தேசியகண்தான இருவார நிறைவு விழாவை அரவிந்த் கண் மருத்துவமனையில் நடத்தின. தலைமை ஆலோசகர் இரா.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் ரா.மீனாட்சி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா கலந்துகொண்டு, கண்தான விழிப்புணர்வு ஓவியம்,கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:

நாமும், நம்மை சுற்றி உள்ளவர்களும் கண்தானம் குறித்து அறிந்து, பிறரையும் விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும்.நான் கண்தானம் செய்ய ஒத்துக்கொண்டு எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதைப்போல மற்றவர்களும் கண்தானம் செய்யவும், பிற உறுப்பு தானம் செய்யவும் முன்வர வேண்டும். பொதுமக்கள் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என்றார்.

கவிஞர் கோ.கணபதி சுப்பிரமணியன், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் பிரான்சிஸ் ராய், ரோட்டரி மாவட்ட ஆளுநர் (தேர்வு) ஆர். முத்தையா பிள்ளை, அரிமா சங்க மாவட்ட துணை ஆளுநர் என்.கே. விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்