கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரி வித்தது:
பேரிடர் காலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக் கப்பட்ட பொதுமக்களை புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல ஏதுவாக மாற்று வழி தேர்வு செய்ய வேண்டும். வருவாய் வட்டாட்சியர்கள் பொதுப்பணித்துறைக்கு தகவல் தெரிவித்து புயல் பாதுகாப்பு மையங்களில் உள்ள பழுதினை சரி செய்ய வேண்டும். அருகில் உள்ள சமுதாய கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தனியார் திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு உரிய வசதிகள் உள்ளதா என உறுதி செய்ய வேண்டும். அவ்வப்போது ஏற்படும் பாதிப்புகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளவெள்ள நிவாரண பிரிவு தொலை பேசி எண் 1077-ல் தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையினர் பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குதல், எரிபொருள் தயார் நிலையில் வைத்திருத்தல், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஜெனரேட்டர், பம்ப்செட், மரம் அறுக்கும் இயந்திரம் போன்றவை தயார் நிலையில் உள்ளதை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
நெய்வேலி சுரங்கம்-1, சுரங்கம்-1ஏ மற்றும் சுரங்கம்-2 ஆகி யவற்றில் சேமிக்கும் நீரை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் வெளியேற்றக் கூடாது என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சி.சக்திகணேசன், கூடுதல்ஆட்சியர் ரஞ்ஜித்சிங், திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப் பனவர், சார்-ஆட்சியர்கள் மதுபாலன், அமித்குமார், தேசிய பேரிடர் மீட்பு படை (அரக்கோணம்) ஆய்வாளர் ரோகித்குமார், உதவிஆய்வாளர் அமித்குமார், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அதிய மான் கவிரயசு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி சுரங்கத்தில் சேமிக்கும் நீரை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்காமல் வெளியேற்றக் கூடாது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago